நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) மாலை-04 மணியளவில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற தேசியமட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் குருநாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின்
பெண்கள் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டித் தேசியமட்டச் சம்பியனாகிச் சாதித்துள்ளது.

குறித்த தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஆன் திவிஸ்சனாவும், சிறந்த கோல் காப்பாளராக இதே கல்லூரியைச் சேர்ந்த வ.சாளினியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.