தேசிய உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் சம்பியன் வென்ற யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்களுக்குச் சிறப்புக் கெளரவம்
Ad Space
Ad Space
Ad Space
கடந்த சில தினங்களுக்கு முன் அனுராதபுரத்தில் நடந்த 16 வயது ஆண்களுக்கான அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி புங்குடுதீவு மகாவித்தியாலயத்துடன் மோதி 2: 0 என்ற ரீதியில் வெற்றியீட்டித் தேசிய மட்டத்தில் சம்பியனாகியது.
இந் நிலையில் தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற 16 வயது உதைபந்தாட்ட வீரர்கள், பொறுப்பாசிரியர்களைக் கெளரவிக்கும் முகமாகச் செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை வயாவிளான் மத்திய கல்லூரி நிர்வாகமும், பழைய மாணவர்களும் இணைந்து சிறப்புக் கெளரவிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
Ad Space
Ad Space
Ad Space