தையல் கலையில் 15 நிமிடங்களில் உலக சாதனை படைத்த யாழ் வடமராட்சி மண்ணின் இளம் பெண்: குவியும் பாராட்டுக்கள்!
Ad Space
Ad Space
Ad Space
15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்குத் திறமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது வழங்கப்பட்ட சிறப்புப் பணியைப் பதினைந்து நிமிடங்களுக்குள் வெற்றிகரமாகச் செய்து முடித்து உலக சாதனை படைத்ததுடன் உலகச் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரையும் யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண்ணான ஜெயந்தன் மேரி சுலக்சனா பதிவு செய்து சாதித்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
Ad Space
Ad Space
Ad Space