வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மயிலிட்டிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழாவும் இறுதி நிகழ்வும் எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை-09.30 மணியளவில் குரும்பசிட்டிப் பொதுநோக்கு மண்டபத்தில் மயிலிட்டி உப அலுவலகப்  பொறுப்பதிகாரி நா.விஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்  பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சிவகுமார் சிவானந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் சூசைராஜா திலகதீபன் மற்றும் ஆசிரியர் எஸ்.இராஜேந்திரகுமார் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.