தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது
Ad Space
Ad Space
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்கு செல்வதாக கூறி, விகாரை பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த பொலிஸார் இருவரையும் விசாரித்த வேளையில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதையடுத்து, இருவரையும் கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space