“தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜக அழுத்தத்துக்கு இணங்கிப்போனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை விட, திமுக மோசமான முடிவை சந்திக்கும். பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் திமுகவுக்குதான் விபரீதம்” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் எச்சரித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் சார்பில் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்பி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், “தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால், இந்தி பேசும் மாநிலங்களை மையமாக வைத்தே அரசியல் நடக்கும்.
இந்த மசோதாவை ஆதரிக்க திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு ஒப்புக்கொண்டால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 5 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் மூலம் 2029-ம் ஆண்டிலேயே சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடும் என்று பாஜகவினர் ஆசை காட்டுகின்றனர்.
“தொகுதி மறுவரையறையை திமுக ஆதரித்தால் மோசமான முடிவை சந்திக்கும்” - கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space