தொடருந்து மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெண்ணொருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வெள்ளை மற்றும் பழுப்பு நிற ஆடை அணிந்திருந்ததுடன், அவரிடம் பச்சை நிறப் பை ஒன்றும் இருந்துள்ளது. அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space