தொடருந்து மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Ad Space
Ad Space
நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து அதிகாலை 7.15 மணியளவில் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட நீர்கொழும்பு கட்டுவ ரயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கவனக்குறைவாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போதே இந்தத் விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எனத் தெரிவிக்கப்படும் போதிலும், அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும்,விபத்து குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space