தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (27. 10.2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.  

எவ்வாறாயினும் கல்விப் பொதுத்தராதரச் சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.