சுவிட்சர்லாந்தில், நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில், 89 சதவிகித மக்கள் ஒவ்வொரு மாதமும் கணக்குப் பார்த்து செலவு செய்யத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். 

நிதிச் சுமையால், நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடுவதாகத் தெரிவித்துள்ளார்கள். 

பாதிக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு தங்கள் விடுமுறைச் செலவுகளைக் குறைத்துள்ளதாகவும், 47 சதவிகிதம் பேர், உணவுப் பொருட்கள் வாங்குவதைக் குறைத்துள்ளதாகவும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது .

நடுத்தர வர்க்கத்தினர் நிலையே இப்படியிருக்கும்போது, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் நிலையோ அதைவிட மோசம். 

அவர்களில் சிலர், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகளுக்காக, தங்கள் காரை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குளிர்காலத்தில் வீடுகளை வெப்பமூட்ட பயன்படுத்தப்படும் எண்ணெய் விலை உயர்ந்துவருவதால், குளிர்காலத்துக்காக வைத்துள்ள எண்ணெயை குறைவான அளவில் செலவிடத் துவங்கியுள்ளதாகவும், குளிர்காலம் துவங்கும் முன் எண்ணெய் விலை குறையலாம் என்னும் நம்பிக்கையில் தாங்கள் இருப்பதாகவும் சில குடும்பங்கள் தெரிவிக்கின்றன.