வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்வதுடன் இந்த 42 படகுகளைத் தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் புதன்கிழமை  (10.06.2026) யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.