நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெடுந்தீவிலிருந்து இலவச படகுச் சேவை
Ad Space
Ad Space
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (28.06.2026) யாழ். நெடுந்தீவிலிருந்து நயினாதீவுக்குத் தனியார் படகுச் சேவை இலவசமாக இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை-07 மணியளவில் கரிகணன் தனியார் படகு நயினாதீவு நோக்கிப் புறப்படுமெனப் படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.ஆகவே, நெடுந்தீவிலிருந்து நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் செல்ல விரும்பும் அம்மனின் அடியவர்கள் காலை-07 மணிக்கு முன்னதாக நெடுந்தீவு மாவிலித்துறை இறங்குதுறைக்கு வருகை தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space