தமிழ்மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு கொண்டு வரவுள்ள ஏக்கிய ராஜ்ஜிய வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாகச் சுயாட்சித் தீர்வை  ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல்  தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.02.2026) முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, வல்வெட்டித்துறை நகர பிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், மக்கள் போராட்ட முன்னணியின் முக்கியஸ்தர் ராஜ்குமார் ராஜீவ்காந், சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி. கலாநிதி.குமாரவடிவேல் குருபரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற் துறையின் தலைவர் கலாநிதி தி.விக்னேஸ்வரன் மற்றும் சிவில்- சமூக சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.