வடமராட்சியில் தீடீரெனத் தீப்பற்றிய முச்சக்கரவண்டி: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி, பயணிகள்
Ad Space
Ad Space
Ad Space
யாழ் வடமராட்சியில் பருத்தித்துறை- மருதங்கேணி வீதியில் இன்று திங்கட்கிழமை (16.02.2026) பிற்பகல் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த போதும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களும், சாரதியும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
எனினும், முச்சக்கரவண்டி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திரக் கோளாறே தீப்பற்றலுக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space