யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதிச் சைவத்தமிழ் மன்னன் 2 ஆம் சங்கிலியனின் 407 ஆவது நினைவுநாள் விழா சனிக்கிழமை (06.06.2026) யாழ்.நல்லூர் முத்திரைச் சந்தியடியிலுள்ள சங்கிலிய மன்னனின் சிலையடியில் சங்கிலிய மன்னனின் நினைவுதினக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நல்லூரிலுள்ள 2 ஆம் சங்கிலியனின் உருவச் சிலையடியில் திருமுறைப் பாராயணம், நந்திக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து 2 ஆம் சங்கிலிய மன்னனின் வரலாற்றை ஒளிப் படங்கள் ஊடாக வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சிக் கூடம் திறக்கப்பட்டது.