நல்லூர்ப் பிரதேச சபையின் செயற்பாடுகளில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் சேவைத் தரத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனின் வழிகாட்டுதலின் கீழ் நல்லூர்ப் பிரதேச சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முன்னோடியான உள்ளூராட்சி நிர்வாகமாக நல்லூர்ப் பிரதேச சபையை உருவாக்கும் முயற்சிக்குக் குறித்த பிரிவு முக்கிய பங்களிப்பை வழங்குமென நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தெரிவித்தார்.