நவகமுவ பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவல் இன்று வியாழக்கிழமை (8) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாநகர சபையின் தீயணைப்பு பணியினர் 5 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரஒம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.