எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான நாமல் ராஜபக்‌ஷ இன்று கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் குழாம், அன்றைய தினம் நாமல் ராஜபக்‌ஷவை சிறைச்சாலைகள் மூலமாக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது.