நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!
Ad Space
Ad Space
நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியில் இன்று (04) வியாழக்கிழமை காலை பிரதான வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று திடீரென வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் வண்டி மீது முறிந்து வீழ்ந்ததில், பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் காலை நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரண்டு பெண்கள் (என மொத்தம் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மரம் வீழ்ந்து முச்சக்கரவண்டி முற்றிலும் நசுங்கிய போதிலும், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்விதப் பாதிப்புமன்றி உயிர் தப்பியுள்ளார்.
Ad Space
Ad Space