நாவலப்பிட்டி சோலன்கந்தையில் மண்சரிவு ; முதியவர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
நாவலப்பிட்டி சோலன்கந்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி முதியவர் (வயது 65) ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவர், கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space