நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.