நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலத்தை வாவியில் இருந்து மீட்டுள்ளனர்.
குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது வேறு எவரேனும் அவரைக் கொலை செய்து சடலத்தை வாவியில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

