நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் ; 06 குடும்பங்கள் இடப்பெயர்வு
vidiyel 3 ஆவணி 2026 · 13:50 9 views
Ad Space
Ad Space
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
அதன்படி, நுவரெலிய சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.