யாழ்.நெடுந்தீவில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் புதிதாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(05.07.2026) முற்பகல்-11.30 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்   இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  க.இளங்குமரன், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,  நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் என் பிரபாகரன், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.