நெடுந்தீவுப் பிரதேச செயலகத்துக்குப் புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவதுரை றஜிந்தன் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வைத்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (05.01.2026) நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.