நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மனங்க், மைகுடி, பெக்லங், பார்பட், பல்பா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும்மழை பெய்து வருகிறது.
கடும் மழையினால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வெள்ளப் பெருக்கு, மண்சரிவில் சிக்கி 14 பேர் மாயமான நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் தொடர்ந்து ஏற்படும் அசாதாரன வானிலையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
