பதவி ஸ்ரீபுர நகர வீதி அபிவிருத்தித் திட்டம் ஆளுனரால் ஆரம்பித்து வைப்பு
vidiyel 19 வைகாசி 2026 · 04:10 6 views
Ad Space
Ad Space
2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 40 மில்லியன் செலவில் பதவி ஸ்ரீபுர நகரப் பகுதியில் வீதியை விரிவுபடுத்தி நடைபாதைகளுடன் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் திங்கட்கிழமை (18) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களினதும், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களினதும் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பதவி ஸ்ரீபுர பிரதேச சபை தலைவி ஷீலா கருணாநாயக்க அவர்களும், மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பொறியியலாளரும் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.