காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில், சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை வழிப் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முந்தைய திமுக அரசும், மத்திய அரசும் திட்டமிட்டிருந்தன. இதற்காக ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
குறிப்பாக ஏகனாபுரம் கிராமம் மொத்தமாக இத்திட்டத்துக்காக குறி வைக்கப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரமும் கிராமமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று அஞ்சி, அப்பகுதி மக்கள் கடந்த 1,400 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
விமான நிலையம் அமைய உள்ள 13 கிராமங்களில் நிலம் விற்க, வாங்க இன்னும் தடை நீடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அரசாணை வெளியிடுவதுடன், நிலம் விற்க, வாங்க உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலவரம் என்ன?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space