பறக்கும் ‘டெஸ்லா ரோட்ஸ்டர் 2’ காரை தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். பறக்கும் காரை தயாரிக்க உள்ளதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பல ஆண்டு கால தீவிர ஆராய்சிக்குப் பிறகு ‘ரோட்ஸ்டர் 2’ மின்சாரக் காரை மஸ்க் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார். இதுவரை அறிவியல் புனைக் கதை திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாக இருந்த ஒரு விஷயத்தை எலான் மஸ்க் இந்த கார் அறிமுகத்தின் மூலம் நிஜமாக்கி காட்டியுள்ளார்.
டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மேம்பாடு மற்றும் சோதனை மையத்தில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்வில், மிகப்பெரிய வளைந்த பாதையில் தலைகீழாகப் பயணித்த இந்த மின்சாரக் கார், காற்றில் தலைகீழாகச் சுழன்று சில வினாடிகள் ஆகாயத்தில் மிதந்தவாறே தரை இறங்கியது.கார் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் பேசத் தொடங்கிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “ஆம், இது வெற்றிகரமாகச் செயல்பட்டுவிட்டது!” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய டெஸ்லா வாகனப் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் லார்ஸ் மொராவி “பறக்கும் கார்கள் என்பது இனி வெறும் கற்பனையல்ல, நிஜம்” என்று கூறினார். ரோட்ஸ்டர் 2 காரின் அசத்தல் அம்சமாக இந்த கார் வெறும் 1 வினாடியில் 0 முதல் 60 mph (மணிக்கு 96 கி.மீ) வேகத்தை எட்டிப்பிடிக்கும் வல்லமை கொண்டது.