உரிய அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெலிகம பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை (21) வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வணிகசிறி மாவத்தை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜை எனவும் அவர் வெலிகம பகுதியில் வதிவிட விசா அடிப்படையில் வசித்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.