பல ஏக்கர் நெல்வயல்களை முற்றாக நாசமாக்கிய காட்டுயானைகள்
Ad Space
Ad Space
அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளன.
இரவு வேளையில் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்துக்குள் நுழையும் காட்டுயானைக் கூட்டம் அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வங்கிக் கடன்களைப் பெற்று, பெரும் சிரமத்துக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் நாசமாகிவிட்ட காரணத்தினால், தம்மைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக விவசாய சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டுயானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Ad Space
Ad Space