பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “சோதி உபாலி” என்று அழைக்கப்படும் அரம்பவலகே தொன் உபாலி ரன்ஜித் என்பவரின் மகள் உட்பட இரண்டு பெண்கள் மாலம்பே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாலம்பே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மற்றைய பெண் சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் மருமகள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்களிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.