மொனராகலையில் எத்திமலை - கொட்டியாகல பகுதியில் கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் எத்திமலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 31 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொட்டியாகல மற்றும் எதிமலை பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
எத்திமலையில் கஞ்சா செடிகள்,துப்பாக்கியுடன் இருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space