நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக விரைவில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார். 

நேற்று (11) புனித பேதுரு தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை, வழிபாடு நடைபெற்றபோது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பாப்பரசர் லியோ இதனை தெரிவித்தார். 

71 வயதுடைய பாப்பரசர் லியோ, தனது நுரையீரலில் சிறிய முடிச்சு  போன்ற ஒன்று வளர்ந்துள்ளதாகவும் அது, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்ததோடு, இந்த வாரமே சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ரோமில் உள்ள கெமெல்லி வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை  செய்யப்படவுள்ளது. 

சிகிச்சைக்குப் பின்னர், சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த மாதம் தென் அமெரிக்காவுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.