பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு
Ad Space
Ad Space
மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹதெனிய பகுதியிலுள்ள காணி ஒன்றில் நேற்று சனிக்கிழமை (13) மாலை பாழடைந்த கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வேவுட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் மீதான நீதவான் விசாரணைகளுக்காக, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் தற்போது பொலிஸ் பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாவத்தகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space