களுத்துறை, பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை எல இவுர பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 1890 லீற்றர் கோடா (10பீப்பாய்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெலெகெதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட தொகையானது மேலதிக நடவடிக்கைகளுக்காகப் பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.