பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிதி நிறுவனத்தைப் பராமரித்தல், மேம்படுத்துதல், பிரசாரப்படுத்துதல், நிதி வழங்கல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்று செவ்வாய்க்கிழமை  (03) நீர்கொழும்பு பகுதியில் வைத்து இந்த நிதி மோசதியுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திம்பிரிகட்டுவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 59 வயதுடையவர்கள் ஆவர்.

மேலும், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.