பிரபலமாகிவரும் நடிகையான ஸெண்டாயா, பிரான்சின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானுடன் கைகுலுக்கிய விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார், ஸ்பைடர்மேன் புகழ் நடிகையான ஸெண்டாயா.
ஸெண்டாயா தனக்கான இடத்தில் அம்ர்ந்திருக்க, அங்கு வந்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான்.
ஸெண்டாயாவைக் கண்ட பிரிஜிட், அவரிடம் சென்று கைகுலுக்கியுள்ளார். ஆனால், அந்த விடயம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டது.
அதாவது, பிரிஜிட், ஸெண்டாயாவின் அருகில் சென்று, குனிந்து அவருடன் கைகுலுக்க, ஸெண்டாயா தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழாமலேயே பிரிஜிட்டுடன் கைகுலுக்கியதுதான் சர்ச்சைக்குக் காரணம்.

பொதுவாகவே, அமர்ந்தவண்ணம் யாருடனும் கைகுலுக்குவது நாகரீகமான விடயம் இல்லை என கூறப்படுவதுண்டு.
அத்துடன், கைகுலுக்கிய நபரும் சாதாரண நபர் அல்ல, ஒரு நாட்டின் முதல் பெண்மணி. அப்படியிருக்கும்போது ஸெண்டாயா எழுந்திருக்காமலே அவருடன் கைகுலுக்கிய விடயம் இணையத்தில் விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது. இன்னொரு பக்கம், அது ஒரு சில விநாடிகள் மட்டுமே நீடித்த ஒரு சம்பவம், இன்றைய கால கட்டத்தில், சில விநாடிகள் நீடிக்கும் வீடியோக்கள் கூட பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகின்றன என்கிறார்கள் சில ஊடகவியலாளர்கள்!