புதிதாக நியமனம் பெற்ற ஆயர் அன்ரன் றஞ்சித் ஆண்டகை யாழ். ஆயர் மற்றும் குருக்களுடன் சந்திப்பு
vidiyel 1 ஆடி 2026 · 15:48 8 views
Ad Space
Ad Space
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை இன்று 01 ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மற்றும் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.