பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
Ad Space
Ad Space
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று வெள்ளிக்கிழமை (07) நண்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 47 வயதுடைய நபர்கள் ஆவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொகவந்தலாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space