பொதுப்பணித் துறையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தரலாம்
Ad Space
Ad Space
‘பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சிகளில் தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத் தொகை என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில், ஒப்பந்ததாரர்களை அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர் களுக்கு நெருக்கமாக இருந்த வர்கள்எனபலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதிகொடுத்து பணம் வாங்கியுள்ளனர்.
பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளை ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
இதுபோல் பாதிக்கப்பட்டவர் களோ, பணம் கொடுத்து ஏமாற் புகார்றப்பட்டவர்களோ கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.
அவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அந்தத் தொகை திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space