பொலித்தீன், இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்
Ad Space
Ad Space
பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, உற்பத்தியாளர் ஒருவர் தனது தயாரிப்பொன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த பின்னர், அதன் மீள்சுழற்சி செயன்முறையை சரியான முறையில் கண்காணித்து உறுதிப்படுத்துவது அவசியமாக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space