போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானம்
Ad Space
Ad Space
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகளை பேராசிரியர் கபில பெரேரா மீறியுள்ளதாக அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்தே, அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
பேராசிரியர் கபில பெரேரா தனது பதவி விலகல் தீர்மானத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக பொதுச் சேவையில் கடமையாற்றிய அவர், தனது பணிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வித்துறையிலிருந்து பொதுச் சேவைக்கு பிரவேசித்த பேராசிரியர் கபில பெரேரா, இதற்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர் ஆவார்.
அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவர் மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணைந்துகொள்ளத் தயாராகி வருவதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Ad Space
Ad Space