போதைப்பொருள் சந்தேகநபரின் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
Ad Space
Ad Space
கடந்த பெப்வரி மாதம் 26 ஆம் திகதி போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம், அரியாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபரின் சொத்துக்கள் குறித்து பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் விளைவாக, சட்டவிரோத முறையில் ஈட்டப்பட்டதாக கருதப்படும் சுமார் 6 இலட்சத்து 95 ஆயிரத்து 950 ரூபாய் பெறுதிமதியான டிங்கி படகு, படகுக்கான என்ஜின் மற்றும் 9 இலட்சம் பெறுமதியான 2 மோட்டார் வண்டிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் குறித்து யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
Ad Space
Ad Space