போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக திருகோணமலையில் விழிப்புணர்வு நடைபவனி
vidiyel 24 வைகாசி 2026 · 02:50 6 views
Ad Space
Ad Space
இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நடைபவனி நேற்று (23) திருகோணமலையில் நடைபெற்றது.
இந்த நடைபவனியை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் போதைத் தடுப்பு தொடர்பிலான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய வாசகங்களை ஏந்தியவாறு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இருந்து திருகோணமலை பஸ் நிலையம் வரை சென்றனர்.
இதில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன உட்பட இளைஞர் சம்மேளனங்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையாடல்களும் இடம்பெற்றன.