மகா சிவராத்திரியை முன்னிட்டு யாழிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்
Ad Space
Ad Space
Ad Space
சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரத நன்னாளை முன்னிட்டு உலக சைவத் திருச்சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள் சேவா சங்கம் இணைந்து முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய சிவலிங்கப் பெருமானுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட ஊர்தியைத் தாங்கிய சிவனடியார்களின் பாதயாத்திரை நாளை திங்கட்கிழமை (09.02.2026) காலை-08 மணியளவில் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
மகா சிவராத்திரி நாளான எதிர்வரும்-15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பாதயாத்திரைக் குழுவினர் திருக்கேதீச்சரம் ஆலயத்தைச் சென்றடைந்து வழிபாடுகளிலும் ஈடுபடுவர்.
Ad Space
Ad Space
Ad Space