எதிர்வரும்- 12 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மீண்டும் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்களில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்வரும்-15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும்-11 ஆம் திகதி புதன்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையற்ற வானிலை நிலவும் வாய்ப்புள்ளது. எனினும், உள்ளூர்க் காரணிகளின் செல்வாக்கினால் இந்த நாட்களில் ஒரு சில இடங்களில் மிகச் சிறிய அளவிலான மழை கிடைக்கக் கூடும். மழையற்ற, மழையுள்ள நாட்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கு உட்படப் பல பகுதிகளிலும் மீண்டும் மழைக்கு வாய்ப்பு!!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space