மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலையில் சில காட்டுயானைகள் நுளைந்து வீடு ஒன்றினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் கிராமவாசி ஒருவரின் வீட்டினை உடைத்து அங்கிருந்த உணவுப் பொருட்களை உண்டு, வீட்டுப் பாவனை பொருட்களை சேதப்படுத்தி துவசம்செய்துள்ளது.
யானை பாதுகாப்பு மின்சார வேலியையும் தாண்டி இந்தக் காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும் உடமைகளையும் அழித்து வருகின்றது.
இதேவேளை, கடந்த வாரத்தில் இப்பகுதியில் இரண்டு வீடு ளுக்குள் புகுந்து தமது உடமைகளையும் பயிர்களையும் அழிந்துள்ளதாக இந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
தாம் தூக்கமின்றி பிள்ளைகளுடன் உயிர் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் இங்குள்ள காட்டுயானைகளை அகற்றி பாதுகாப்பு வேலியினை பலப்படுத்தி கிராமங்களுக்குள் யானை உள்வராதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
