மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி சனிக்கிழமை (24) மாலை இராணுவத்தினர் பயணம் செய்த டிபென்டர் ரக வாகனம் கீளியன் குடியிருப்பு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
காயமடைந்த ஏனைய 11 இராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களை மன்னாரிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த விபத்தின் போது டிபென்டர் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

