மன்னார் வங்காலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Ad Space
Ad Space
மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் தொடர்பாக வங்காலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சடலம் இந்திய மீனவரா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space